Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 2, 2016

வெளியூர் போக ரயில் நிலையம் செல்பவர்களே உஷார் - உங்களை வட்டமிடும் 12 ஜோடி கண்கள்



வெளியூர் செல்ல சென்னை சென்ட்ரல், எழும்பூர்  ரயில் நிலையம் செல்லும் பயணிகளிடம் உதவி செய்வது போல் நடித்து செல்போன், மற்றும் கைப்பைகள், லக்கேஜ்களை திருடி செல்லும் பீகார் சிறுவர்கள், வாலிபர்கள் 12 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரயிலில் இடம் பிடித்து தருவதாக கூறி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தகவல்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன்கள் திருடுபோகக்கூடிய சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வந்தன.

இது தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் ரயில் நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 பேரை பிடித்து ரயில்வே போலீசார்  விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இரண்டு பேர் உட்பட ஒரு பெரிய கும்பலே பயணிகளிடமிருந்து செல்போன் , லக்கேஜ்களை திருடி வந்தது தெரிய வந்தது.

  பிடிபட்டவர்கள் உள்பட 12 பேர் கொண்ட கும்பல் ரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போன்கள், உடமைகள் ஆகியவற்றை திருடியதும் தெரிய  வந்தது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட 2 பேர் கொடுத்த தகவலை வைத்து 12 பேரை பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் அனைவரும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே ,  பிடிபட்டவர்களில் 3 பேர் சிறுவர்கள்.
இவர்களிடம்  பயணிகளிடமிருந்து  திருடிய 4 விலை உயர்ந்த செல்போன்கள், பயணிகளின் 20 பைகள்  பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 12 பேரையும் சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர். கைதான 12 பேரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பது.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்கும் வடமாநிலம் செல்லும் பயணிகளாக பார்த்து கண்டறிந்து "நான் டிக்கெட் வாங்கித் தருகிறேன். ரயிலில் இடம் பிடித்து தருகிறேன்" என்று ஆசைவார்த்தைக் கூறி பயணிகளின் உடமைகள், செல்போன்கள் ஆகியவற்றை இவர்கள் திருடிச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
"ரயில் பயணிகள் இது போன்று பேசும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். அது போன்று யாராவது ஏமாற்றுவது போல தெரிந்தால் உடனடியாக தமிழக ரயில்வே காவல் துறையின் 1512 என்ற இலவச எண்ணிற்கு போன் செய்து தகவல் கொடுக்கலாம். உடனடியாக ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று சென்ட்ரல் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.