கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் திடீர் முடிவு எல்லோரையும் ஆச்சரியத்திலும், வேறு சிலரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஆனால், இந்த யோசனையை நாங்கள்தான் மோடிக்கு சொன்னோம் என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியிருக்கிறது.
அர்தக்ரந்தி என்பது புனேவில் செயல்பட்டு வரும் ஒரு என்ஜிஓ. பொருளாதார நிபுணர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், சார்ட்டட் அக்கவுண்டண்ட்-களும் நிறைந்துள்ள இந்த என்.ஜி.ஓ அதிகபட்ச மதிப்பில் உள்ள ரூபாய் நோட்டுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றிக்கொண்டே இருப்பதுதான் கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று 1999-களிலேயே கூறியதாகச் சொல்கிறது. அப்போது 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரக் கூட இல்லை.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் ஆவதற்கு முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், அவரைச் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறது இந்த என்ஜிஓ. அப்போது அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த சமயம்.
2013 செப்டம்பர் 9, அர்தக்ரந்தி என்ஜிஓவைச் சேர்ந்த அனில் போகில், மோடியைச் சந்திக்க 9 நிமிடங்கள் அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இவர் அவரைச் சந்தித்து பேச ஆரம்பித்த பிறகு, அந்த சந்திப்பு 2 மணி நேரம் வரை நீடித்திருக்கிறது. அந்த சந்திப்பில், இந்திய பொருளதார சமூக சூழ்நிலையை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. முக்கியமாக கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த தாங்கள் முன்பே ஆய்வு செய்து வைத்திருந்த அதிகபட்ச மதிப்புடையை ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து பேசியிருக்கிறார்கள்.
இந்தியாவில் 85 சதவிகிதம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும். ஏனெனில் பெரும்பாலான முறைகேடான பணப் பரிவர்த்தனைக்கு இந்த 500, 1000 நோட்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தினால் நிச்சயம் வளமான வளர்ச்சியான இந்தியாவை உருவாக்க முடியும் என்று அவர் மோடியிடம் விளக்கமாக எடுத்து கூறினாராம்.
இதுபற்றி மேலும் அனில் போகில் கூறியதாவது. “இதற்கான வேலைகளை 1995-ம் ஆண்டிலேயே எங்களது என்ஜிஓ தொடங்கி விட்டது. ஏனெனில் எங்களால் ஏழை-எளிய மக்கள், பொருளாதார சம நிலையின்மையால் படும் துன்பங்களைப் பார்க்க முடிந்தது. அதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். அரசு ரூபாய் நோட்டுகளை தேவையான அளவுக்கு அச்சடிக்கிறதா? ஏன் மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை முழுமையாக சென்று சேரவில்லை? ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் முறை மற்றும் செலவுகள் என்ன? நம்முடைய வரி விதிப்பு முறைகள் எப்படி இருக்கிறது? எப்படி கறுப்புப் பணமும், கள்ளப் பணமும் சந்தையில் பரவுகிறது? என பல கோணங்களில் முற்றிலுமாக ஆய்வுசெய்யப்பட்டு அறிக்கை தயார் செய்தோம். அதன் மூலம்தான் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்த முடிவுக்கு வந்தோம். ஆனால் உயர்ந்த மதிப்பில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டால் குறைவாக ஒரு நோட்டுக்கு ரூ. 4 மட்டுமே செலவாகும் என்பதே அதிக அளவில் அச்சிடப்பட காரணம்” என்றார்.
உண்மையோ பொய்யோ, பிச்சைக்காரன் படம் தான் மோடி இந்த முடிவெடுக்கக் காரணம் என்று ஒரு பக்கம் பேசப்பட, தற்போது அர்தக்ரந்தி என்.ஜி.ஓ தாங்கள்தான் இந்த யோசனையை மோடிக்குச் சொன்னோம் என்று கூறியிருக்கிறது. இன்னும் யார் யாரெல்லாம் இப்படி கிளம்புவார்கள் என்று தெரியாது? ஆனால் யார் இந்த யோசனையைச் சொல்லியிருந்தால் என்ன, நல்ல யோசனை என்றால் வரவேற்க வேண்டியதுதானே!
'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?' என்று இருக்காமல் அதனை வரவேற்று செயல்படுத்திய அரசை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.