உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும், தேர்தல் பணிக்கு மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும். அது வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க சார்பில் அதன் மாநிலங்களவை எம்.பி-யும், அமைப்புச் செயலாளருமான ஆலந்தூர் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கின்றனர். மேலும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். வழக்கு 6-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலந்தூர் பாரதியிடம் பேசினோம்.
"உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி இருப்பதாகத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறதே"
"உள்ளாட்சிப் பதவிகள் இட ஒதுக்கீடு விஷயத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறை கடைபிடிக்க வேண்டும். ஆனால், இப்போது தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக சுழற்சி முறையை அமல்படுத்தி இருக்கிறது. உதாரணமாக மறைமலை நகர் 20 ஆண்டாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக இருக்கிறது. அதை இந்த முறையும் மாற்றவில்லை. சென்னையில் 1996-ல் இருந்து மேயர் பதவி ஆண்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். திருச்சியில் 20 ஆண்டுகளாக மேயர் பதவி பெண்களுக்குத்தான் இருக்கிறது. இப்போதும் பெண்களுக்குத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். அதாவது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பதவி தருவதற்காக ஆளும் கட்சி சொல்வதை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி இருக்கிறது. இதைத் தடுக்கவேண்டும் என்றுதான் வழக்குத் தொடுத்திருக்கின்றோம்"
"நீதிமன்றத்தில் வேறு என்ன வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள்?"
"இப்போது மாநகராட்சி, நகராட்சி ஆகிய இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் மட்டும்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றனர். பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்துகின்றனர். வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர் இருக்காது. வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளை மொத்தமாக எடுத்து தங்களுக்குச் சாதகமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். எனவேதான் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம். பொதுத்தேர்தல் போல வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும். பிற மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று சொல்லி இருக்கின்றோம்"
"வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருக்கிறதா?"
"மாவட்ட கவுன்சில் தேர்லில் பதிவாகும் ஓட்டுக்களை எண்ணும் போது முறைகேடு நடக்கிறது. உதாரணத்துக்கு ஒரு மாவட்ட கவுன்சிலில் 50 ஆயிரம் ஓட்டுக்கள் பதிவாகிறது என்றால் அதை இரண்டு இடத்தில் எண்ணுவார்கள். அப்போது முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதே போல பஞ்சாயத்து, மாவட்ட கவுன்சில், நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட 5 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்"
"தேர்தலைத் தள்ளி வைக்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லி விட்டதே?"
"தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகும் தேர்தலைத் தள்ளி வைக்கலாம். 1991-ல் தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கூட இல்லாத ஒரு வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதி என்று அறிவித்திருந்தார்கள். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. என் வழக்கைக் காரணம் காட்டி அப்போது 5 ஆண்டுகளாக இதே அ.தி.மு.க அரசு தேர்தலை நடத்தவில்லை. ஆனால், விதிமுறைப்படி 6 மாத்த்துக்கு தேர்தலை தள்ளி வைக்க வழி இருக்கிறது. கடந்த 2011-லும் இதே போன்று வழக்குத் தொடுத்தோம். அப்போது, 'ஏன் நீங்கள் முன்கூட்டியே அரசிடம் முறையிடவில்லை' என்று நீதிபதிகள் கேட்டனர். எனவே இந்த முறை 4 மாதத்துக்கு முன்பே கவர்னரிடம் மனுக்கொடுத்தோம். தேர்தல் ஆணையத்திடமும் மனுக் கொடுத்தோம். ஆனாலும், எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை. எனவேதான், வழக்குத் தொடுத்தோம்."

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.