முதல்வர் அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஓடிவிட்டது. முழுமையாக முப்பது நாட்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி நிகழ்ச்சிகள், அறிக்கைகள், எதுவும் இல்லாமல் சென்றுவிட்டன.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி முதல், முதல்வரின் துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கான உத்தரவையும் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது. அதனையடுத்து பன்னீர்செல்வம் ஏற்கெனவே கவனித்து வந்த நிதித்துறை, நிர்வாக சீர்த்திருத்தம் துறையோடு, முதல்வரின் பொது மற்றும் நிர்வாகத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., டி.ஆர்.ஓ., காவல் துறை மற்றும் உள்துறை ஆகிய துறைகளையும் சேர்த்துக் கவனித்து வருகிறார். சொல்லப்போனால், இப்போது ஓபிஎஸ் 'ஆக்டிங் சி.எம்.'
கடந்த 14 நாட்களாக 'ஆக்டிங் சி.எம். எப்படி இருக்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்." காலை அப்போலோ சென்றுவிட்டு, தமது கோட்டை பணிக்காக நிதியமைச்சர் அறைக்குள் 10.30 முதல் 11 மணிக்குள்ளாக தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார் ஓபிஎஸ். அதன் பிறகு துறை சார்ந்த பணிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கிறார். பின்னர் தலைமைச் செயலாளர் அழைத்தார் என்றால் இரண்டாம் தளத்தில் உள்ள அவரின் அறைக்கு விரைந்து செல்கிறார். அங்கே அவர் காண்பிக்கும் கோப்புகளில் கையெழுத்திடுகிறார். பின்னர் அரசு ஆலோசகர் கூறும் ஆலோசனைகளைக் கவனமுடன் கேட்டுக்கொண்டு பவ்யமாக தமது அறைக்குத் திரும்புகிறார். நிதியமைச்சர் அறையில் யாரேனும் காத்திருந்தால் அவர்களிடம் என்ன ஏதென்று விசாரித்துவிட்டு புன்னகையோடு மதிய உணவுக்காக இல்லம் செல்வார். அதன் பின்னர் தலைமைச் செயலக வருகை அடுத்தநாள் காலைதான். இப்படித்தான் கடந்த 14 நாட்களாக வார நாட்களில் நேரம் தவறாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவனைப்போல தலைமைச் செயலகத்துக்கு வந்துபோகிறார் ஓபிஎஸ். ஆனால் இந்த பவ்ய சீனுக்கு பின்னால் 'பலே' திட்டம் இருக்கிறது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
காரணம், முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் இருக்கிறார். ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் உடல்நலம் குன்றிய நிலையில் அரசைப் பொறுப்பாகக் கவனித்துக்கொள்ள அவரின் ஒப்புதலோடு ஓபிஎஸ் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவரின் பொறுப்பில் அரசை விட சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அவரிடமும் பரிந்து பேசி,'ஆக்டிவ் சி.எம்.' என்ற இடத்துக்கு ஓபிஎஸ் இரண்டு முக்கிய நபர்களால் அழைத்து வரப்பட்டார். அவர்கள் வேறு யாருமல்ல. தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் இருவருமே அந்த முக்கியமானவர்கள். காரணம், கடந்த 2014-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்தின் முதல்வரான பன்னீர்செல்வம், இவர்களிடம் மிக பக்குவமாக நடந்துகொண்டார். அவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அது இப்போதும் தொடருகிறது.
அப்போலோவில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆனபிறகு, 'ஓபிஎஸ், அரசை மிக பொறுப்பாகக் கவனித்துக்கொண்டார் மேடம்' என்று ஜெயலலிதாவிடம் அக்கவுண்ட் கொடுத்து, அதிமுகவில் அவருக்கு அடுத்த தலைவர் ஓபிஎஸ் தான் என்ற நிலையை உருவாக்க திட்டம் இருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர் இல்லை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முதல்வர் பொறுப்புக்கு பன்னீர்செல்வம் உகந்தவர் என்ற மன நிலையை ஜெயலலிதா பெறவும் முடியும் என்பதால் தலைமைச் செயலாளரும், அரசு ஆலோசகரும் சொல்லும் எல்லாவற்றுக்கும் பணிந்து செல்கிறார்.
அதனால்தான் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூட அவர் எதுவும் பேசவில்லை. கடந்த 19-ம் தேதி, வழக்கமாக அமைச்சரவை கூடும் அறையில் நடந்த அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அரசின் செய்திக்குறிப்பில் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கூட்டத்தில் அதிகம் பேசியது அரசு ஆலோசகர் ஷீலாதான். 'மேடம் டிரீட் மென்ட்ல இருக்கும் இந்த நேரத்தில் கேள்விக்கு இடம்கொடுக்காமல் அனைவரும் செயல்படவேண்டும்.' என்று கூறி சுமார் 20 நிமிடத்துக்கு மேலாக ஆலோசனைகளை அள்ளிவிட்டு, ஒவ்வொரு அமைச்சருக்கும் நடைமுறை டிப்ஸ்களை கொடுத்துள்ளார். கண் அசராமல் ஓபிஎஸ் உட்பட அனைவரும் அவரையே கவனித்துக்கொண்டு இருந்தனர். பின்னர் முன்பே திட்டமிட்டபடி சுமார் 45 நிமிடங்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். அதனால் ஆலோசகர் கூட்டிய அமைச்சரவையோ என்றுகூட தோன்றுவதாக சில அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாக தகவல்கள் உள்ளன.
இதற்கு அடுத்தாற்போல அதிமுகவில் ஓபிஎஸ் செய்யும் 'மூவ்'கள் அமைச்சர்கள் சிலருக்கு அடிவயிற்றில் கிலியடிக்க வைத்துள்ளதாம். அவரின் சில ரகசிய நடவடிக்கைகளை அறிந்த அமைச்சர்கள் சிலர் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று எந்நேரமும் பதற்றத்தோடே நாட்களை நகர்த்தி வருகிறார்களாம். அதில் ஒருவர், நிதியமைச்சரின் தலையீட்டை தாங்க முடியாமல், கொங்கு மாவட்ட மூத்த அமைச்சர் ஒருவரிடம் 'அண்ணே நீங்க சொன்னா நான் கேட்டுக்கிறேன். ஆனால் அவர் சொன்னால் கேட்க மாட்டேன். ரொம்ப பண்றார் அவர்' என்று சில நிமிடங்கள் புலம்பித் தள்ளியிருக்கிறார். அமைச்சர்களில், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தென்மாவட்ட அமைச்சர்களுக்கும் இடையே 'பனிப்போர்' நடக்கிறது. அது கூடிய சீக்கிரம் வெளியில் தெரிந்துவிடும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே சிக்கியுள்ள பிற மாவட்ட அமைச்சர்கள், வியாழன் வந்தால் மயிலை சாய்பாபா கோவிலுக்கும், சனி வந்தால் பார்த்தசாரதி கோவிலுக்கும் செல்கிறார்கள். இல்லையெனில் தங்களது ஊரில் உள்ள முக்கிய கோவில்களில் முதல்வர் நலம் பெற பூஜைகள் யாகம் என்று பிஸியாகிவிடுகிறார்கள்.
இந்தப் பனிப்போர் கடந்த 11-ம் தேதியே தொடங்கியுள்ளது. கடந்த 15-ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சரைச் சந்தித்து 'காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை' என்று வலியுறுத்தினார். அப்போது 'கொஞ்சம் இருங்கள், எடப்பாடி வரட்டும், அவர் இப்போது இந்தத் துறையைக் கவனிக்கிறார்' என்று கூறிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி தமது அறைக்கு வரும் வரை காத்திருந்துள்ளார். பின்னரே திமுகவினரிடம் இருந்து கோரிக்கை மனுவை அவர்களிடம் வழங்கியுள்ளார். ஓபிஎஸ் எடப்பாடிக்குக் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது." என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.