Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

உறவினர்கள் வெறுத்ததால் 4 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை


கேரள மாநிலம் கண்ணூர் அடுத்த மட்டனூரை சேர்ந்தவர் சைலஜா (46). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரெஜித் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி மிஷ்மா இவருக்கு மேபா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சைலஜாவின் நடத்தை சரியில்லை என மிஷ்மா குடும்பம் உள்பட உறவினர்கள் யாரும் சைலஜாவுடன் பேசுவதை தவிர்த்து அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால், மிகுந்த ஆத்திரம் கொண்ட சைலஜா இதற்கு காரணம் மிஷ்மா தான் என அவரின் குடும்பத்தை பழிவாங்குவதற்காக காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள மிஷ்மாவின் உறவினர் இறந்துள்ளார், இதற்காக மிஷ்மா அங்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே சிறுமி மேபா அங்குள்ள ஆற்றில் சடலமாக கிடந்துள்ளார், இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று சிறுமி மேபாவை அவரது உறவினர் சைலஷாவுடன் ஆற்றுப்பகுதியில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சைலஜாவை பிடித்து விசாரணை செய்ததில் தன்னிடம் உறவினர்கள் யாரும் பேசாமால் ஒதுக்கி வைத்ததால் அவர்களை பழிவாங்க முடிவு செய்ததாகவும், அதன்படி நேற்று முன்தினம் வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமியை ஆற்றுப்பகுதிக்கு தூக்கிச்சென்று, சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பிணத்தை ஆற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நாளை திருச்சூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.