தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ரியல் எஸ்டேட் கம்பெனி சொல்லும் வாக்குறுதி என்று நினைத்துவிடாதீர்கள். இது முற்றிலும் உண்மை. ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பேருந்து சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நண்பனாய் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவா போக்குவரத்துக்கழகம், ஜெனிவா மின்சார வாரியம் மற்றும் தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இப்பேருந்தை 15 நொடிகள் சார்ஜ் செய்தால் போதும். இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். பேருந்தின் மேற்கூரையில் சார்ஜ் செய்ய உதவும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
‘ஃபிளாஷ் சார்ஜ்’ தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் ஆகும் இப்பேருந்தின் பேட்டரியில், பயணிகள் பேருந்தில் ஏறியதும் சார்ஜ் ஏற்றப்படும். அந்த 15 நொடியிலேயே 600 கிலோவாட் பவர் உருவாக்கப்படும். அதைக்கொண்டு சுமார் 130 பயணிகளோடு அந்தப் பேருந்தால் 2 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும். அதன்பிறகு பேருந்து நிறுத்தத்தில் முழுதும் சார்ஜ் செய்யப்படும். அதற்கு 4-5 நிமிடங்கள் வரை ஆகுமாம்.
எந்த ஒரு புகையையும் கக்காத இப்பேருந்து சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. ஜெனீவாவிலுள்ள பேருந்துகள், ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறதாம். அந்த டீசல் பேருந்துகள் மட்டும் TOSA எனப்படும் இவ்வகை பேருந்துகளாக மாற்றப்பட்டால் ஆயிரம் டன் வரை கார்பன் டை ஆக்சைடு வாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர்.

2018-ம் ஆண்டு இப்பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்தை பிற நகரங்களோடு இணைக்கும் 23-வது சாலையில் இயக்கப்படுமாம். நாள் ஒன்றுக்கு 10,000 பயணிகள் இந்தப் பேருந்தை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின்சாரப் பேருந்துகள் சுவிட்சர்லாந்தைவிட இந்தியாவுக்குத்தான் மிகப்பெரிய வரமாய் அமையும். ஆம். நம் நாட்டில் மட்டும் 1,50,000 டீசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் வெளியேறும் 95 சதவிகித ‘கிரீன் ஹவுஸ்’ வாயுக்கள் சாலைப் போக்குவரத்தால் வெளியேற்றப்படுபவை. ஒரு டீசல் பேருந்துக்குப் பதிலாக மின்சாரப் பேருந்தைப் பயன்படுத்துவதால் ஆண்டொன்றிற்கு 25 டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவைக் கட்டுப்படுத்த முடியும். மொத்த டீசல் பேருந்துகளுக்குப் பதிலாகவும் மின்சாரப் பேருந்துகளையே பயன்படுத்தினால் ஒரு வருடத்தில் சுமார் 37 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்த முடியுமாம்.
பாரீஸ் காலநிலை மாநாட்டில், ‘கிரீன் ஹவுஸ்’ வாயுக்களின் வெளியேற்றத்தை 33 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் நம் நாட்டிற்கு இப்பேருந்துகள் மூலம் நல்ல வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியின் ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் இதுவொரு மிகப்பெரிய ஊக்கமாய் அமையும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் இந்த வகைப் பேருந்துகள், போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.