சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் கொள்ளை முயற்சி நடந்தது. சி.சி.டி.வி கேமராவில் சிக்காமலிருக்க கொள்ளையர்கள் அதன் பதிவுகளையும் திருடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெசன்ட்நகரில் முத்தூட் பைனாஸ் அலுவலகம் உள்ளது. தீபாவளி என்பதால் விரல் விட்டு எண்ணும் வகையில் வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஊழியர்களும் தங்கள் பணிகளில் மூழ்கியிருந்தனர். இந்த சமயத்தில் மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் பைனான்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்களின் கையில் கத்தி இருந்தது. அதைக் காட்டி மிரட்டியவாறே மேலாளர் அறைக்கு சென்றது கொள்ளைக் கும்பல். இன்னும் சில கொள்ளையர்கள் பைனான்ஸ் அலுவலகத்தின் நுழைவு பகுதியில் நின்றனர். மேலாளர் அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அவரிடம் சத்தம் போடாதே, லாக்கர் சாவி எங்கே என்று கேட்டனர். ஆனால் மேலாளர் சாவி கொடுக்க மறுத்ததோடு போலீசுக்கு தகவல் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல் கத்தியால் மேலாளரை குத்தியது. ரத்த வெள்ளத்தில் மேலாளர் இருக்கையில் சரிந்தார். பிறகு கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
அப்போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன், நாம் இங்கு வந்த தகவல் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கும் என்ற தகவலைச் சொல்ல, சுதாரித்துக் கொண்டது கொள்ளைக் கும்பல், மீண்டும் பைனான்ஸ் அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் மொத்த பதிவுகளைக் கொண்ட தகவல்களை எடுத்துச் சென்றது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவரிடமிருந்து 10 சவரன் தங்க செயினையும் கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது.
இந்த தகவல் கிடைத்ததும் திருவான்மியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் வந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மேலாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கத்திக் குத்து காயமடைந்த மேலாளரின் பெயர் சேகர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சென்னை மாநகரப்பகுதிகளில் ரோந்து பணிக்காக போலீஸ் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு, குற்ற செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது, ரோந்து வாகனங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்களுக்குள் போலீஸார் தூங்குகின்றனர். இல்லையென்றால் அங்கு வேடிக்கைபார்த்து கொண்டு இருக்கின்றனர். இதையெல்லாம் நோட்டமிடும் கொள்ளைக் கும்பல் ரோந்து வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர். எனவே ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் துரிதமாக செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான வசதிகளை போலீஸ் துறை செய்து கொடுக்க வேண்டும்" என்றனர்.
'இந்த கொள்ளை சம்பவத்தில் சி.சி.டி.வி கேமரா பதிவுகள் இல்லை என்பதால் அருகில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது தெரியவரும்' என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.