இமான் அஹமது அப்துல்லாடி எனும் பெண்ணுக்கு வயது 36. ஆனால் இவரின் எடை எவ்வளவுத் தெரியுமா? அரை டன் (500 கிலோ). உடல் பெருத்துவிட்டக் காரணத்தினால் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு வாசலை தாண்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் கட்டிலைவிட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை. இதன் மூலம் உலகிலேயே மிகவும் எடைக்கொண்ட பெண் என்ற பெயரை எடுத்துள்ளார் இமான். எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் வசித்துவருகிறது இமான் குடும்பம். பலரும் தன் உடலிலுள்ள அதிகப்படியான எடையைக் குறைக்க, பல யோசனைகளைத் தேடி அலைவதைப் பார்க்க முடிகிறது.
கட்டிலை விட்டு இறங்கமுடியாத நிலைமையில் இருக்கும் இமானை, சாப்பிடுவது, குளிப்பாட்டுவது உட்பட எல்லா வேலைகளை அவரின் தாய், தங்கையும் தான் கவனித்துவருகிறார்கள். இமான் பிறந்தவுடனேயே ஐந்து கிலோ இருந்திருக்கிறார். ’elephantiasis என்ற நோய் இருப்பதால் தான் இமான் இப்படி மலைப்போல் பெருத்துவிட்டார்’ என்று ஆதங்கத்தோடு கூறுகிறார் தங்கை சைமா அஹமது அப்துல்லாடி (Chaymaa’ Ahmad Abdulati).

சிறுவயதில் குண்டாக தெரிந்தாலும் வளரவளர எடை கூடிக்கொண்டே வந்ததால் முதலில் பள்ளிக்கு செல்லமுடியவில்லை. பிறகு 11 வயது வந்ததும் உடல் இன்னும் குண்டாகிவிட்டது. இதனால் நடக்கவும் முடியவில்லை நிற்கவும் முடியவில்லை என்பதால் தவழ்ந்து செல்ல ஆரம்பித்தார். ஆனால் சில தினங்களிலேயே பிரைன் ஸ்ட்ரோக் அட்டாக் ஆனது. இதனால் உடலில் ஒரு பகுதி செயலிழந்து, ஒன்றுமே செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் இமான்.
ஒரு அங்குலம் கூட நகரமுடியாமல் படுத்தப்படுக்கையாகிவிட்ட இமான், இந்த நாள் வரைக்கும் கஷ்டங்களை அனுபவித்துவருகிறார். கை கால்கள் அசைக்கமுடியவில்லை, உடல் பெருத்துக்கொண்டே போகிறது. இமான் படும் வேதனையைப் பாக்கமுடியாமல் தங்கை சைமா, அரசாங்கத்திடமும், மக்களிடமும் உதவி கோரி முன்வந்துள்ளார். இமானுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.
இமானுக்கு அறுவைச் சிகிச்சை நடைப்பெற்று, இயல்பான பெண்ணாக திரும்பவேண்டும் என்று வாழ்த்துவோம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.