Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

இவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை


சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் உலகின் மிக ஸ்லோவான கேஷியர் என்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில் இருந்தது புனேவில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் கிளை ஒன்றில் பணிபுரியும் ப்ரேம்லதா ஷிண்டே எனும் பெண்மணி. இவர் மெதுவாக பணத்தை வாங்கி, எண்ணி, பாஸ் புக்கில் என்ட்ரி போடுவது ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு நக்கலாக பதிவிடப்பட்டது. ஆனால்...

இரண்டு மாரடைப்புகள், பேரலடிக் ஸ்ட்ரோக்குக்குப் பிறகு, சமீபத்தில்தான் பணியில் சேர்ந்திருக்கிறார் ப்ரேம்லதா. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற உள்ளார் இவர். மாரடைப்புகளுக்குப் பிறகு தனது வேலையில் உள்ள ஈடுபாட்டால், மீண்டும் பணிக்கு வரக் கோரிய அவருக்காக, கூடுதலாக ஒரு கௌன்ட்டர் அமைத்துக் கொடுத்திருக்கிறது வங்கி.

இது தெரியாமல், வீடியோ எடுத்து வைரலாக்கிவிட்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.