உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் முடிவடைகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு கடும்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, தற்போது சிகிச்சையில் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவருகிறது. முதல்வரின் உடல்நிலை தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் கவலைக்குள்ளாக்கியிருக்கும் நிலையில் தலைமைச் செயலக வட்டாரத்தில் முதல்வர் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வருடம் ஆயுதபூஜையை கொண்டாடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள் ஊழியர்கள்
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கும் காலத்தில் தலைமைச்செயலகத்தில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளும்கூட ஒரு மங்கள நிகழ்ச்சியைப்போல் விசேஷமாக நடைபெறும். அரசு நிகழ்ச்சியையே அத்தனை களேபரம் செய்பவர்கள், அவசியமான விழாக்களை விட்டுவிடுவார்களா என்ன...தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட எந்த விழாக்களைவிடவும் ஆயுதபூஜை களைகட்டும் தலைமைச் செயலகத்தில்.
ஆயுதபூஜை அன்று விடுமுறை தினம் என்பதால் முந்தைய பணி நாளில் இதை விசேஷமாக கொண்டாடி மகிழ்வார்கள் ஊழியர்கள். இதற்காக ஒவ்வொரு துறையிலும் ஊழியர்களில் ஆளுக்கொரு தொகை செலுத்தி செலவுகளை பகிர்ந்துகொள்வார்கள்.
ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் இதில் ஆர்வமாக கலந்துகொள்வார்கள். ஆண்டுதோறும் நிகழும் இந்த கொண்டாட்டம் இந்த ஆண்டு மிஸ்ஸிங். காரணம் ஜெயலலிதாவின் உடல்நிலை.
தமிழக முதல்வரான ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் வாசலில் தோரணம் கட்டடங்களுக்கு பளபளப்பு, அலுவலகங்களுக்கு பூஜை செய்வதை சங்கடமாக கருதி ஒட்டுமொத்த துறைகளும் ஆயுதபூஜைக்கு அமைதியாகிவிட்டனர் இந்த வருடம். ஆயுதபூஜை கொண்டாட்டத்துக்காக சில தினங்களுக்கு முன் ஊழியர்கள் எல்லோரிடமும் பணம் வசூலிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில் நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டதோடு வசூலிக்கப்பட்ட தொகை ஊழியர்களுக்கு திருப்பித் தரப்பட்டுவருகிறது.
தலைமைச் செயலகத்தில் ஆயுதபுஜை கொண்டாட்டம் ரத்தானது இது முதன்முறையல்ல. கடந்த 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களுரு பரப்பனஹரா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையில் உள்ள நிலையில் கோட்டையில் கொண்டாட்டம் வேண்டாம் என முடிவெடுத்து அந்த வருடமும் ஆயுதபூஜையை தவிர்த்தனர் ஊழியர்கள். அதன்பின் திரும்ப முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதையடுத்து 2015-ம்வருடம் எந்த சிக்கலுமின்றி ஆயுதபூஜை கொணடாடப்பட்டது.
கடந்த 2001- 2006 ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. போராட்டங்கள் நிகழ்த்திய அரசு ஊழியர்கள் வீடு புகுந்து அடித்து இழுத்துவரப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது அப்போது பல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தலைமைச் செயலக ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்குள்ளானார்கள். அதன் எதிரொலியாக அடுத்த வந்த தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கான காரணங்களில் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதலும் ஒன்றானது.
இத்தனை மனமாச்சார்யங்களுக்கு மத்தியிலும் அரசு ஊழியரகள் தங்கள் முதல்வரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு தங்கள் வழக்கமான ஆயுதபூஜை நிகழ்ச்சியை தவிர்த்த நாகரிகம் பாராட்டுக்குரியதுதான்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.