Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 21, 2016

ரோஜர் ஃபெடரருக்கு என்ன ஆச்சு?


டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்  ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கியதாக செய்தி பரவியது. தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். கிராண்ட் ஸ்லாம் நாயகன் ரோஜர் ஃபெடரர், மாட்ரிட் நகரில்  இன்று காலை கார் விபத்தில் சிக்கியதாக, வாட்ஸ்அப்பில் தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் ட்விட்டரில் இது விறுவிறுவனெ பரவியது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அது வதந்தி எனத் தெரிய வந்ததும் நிம்மதி அடைந்தனர்.

பொதுவாக, கிரிக்கெட் குறித்த புள்ளி விவரங்களை வெளியிடும் மோகன்தாஸ் மேனன், இந்தப் பதிவை வெளியிட்டதால், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் நிருபர்களும், இந்த செய்தியை RT செய்ததால், சந்தேகம் வலுத்தது. சிலர் ‛தி கார்டியன், டெலிகிராப், டெய்லி மெய்ல்’ உள்ளிட்ட வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு மென்சன் செய்து, இது உண்மையா என கேள்வி எழுப்பினர்.




இந்த தகவல் உண்மையா என உடனடியாக கூகுளில் தேடினால், ஒரே ஒரு இணையத்தில் மட்டும் தகவல் வெளியாகி இருந்தது.


‛ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் தன் நண்பர்கள் நடத்திய பார்ட்டியில் பங்கேற்ற ரோஜர் ஃபெடரர், உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி அளவில் தன் பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதியது. இதில் ஃபெடரர் படுகாயம் அடைந்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்’
என, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உன்னிப்பாக கவனித்ததில், அந்த செய்தி நேற்றைய தேதியில் பதிவிடப்பட்டிருந்ததும்,  சிங்கப்பூரில் 2014ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் தொடர்புடைய படத்தை வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது. இது தெரியாமல், ஃபெடரர் விபத்தில் சிக்கியதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.

 




புதன்கிழமைதான் ஸ்பெயினில் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொடங்கிய டென்னிஸ் அகாடமி திறப்பு விழாவில் ஃபெடரர் பங்கேற்றார். அந்த படங்களை மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக ஃபெடரர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  அதற்குள் இப்படி ஒரு வதந்தி பரவியது, ஃபெடரர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியில், அந்த தகவல் உண்மை இல்லை எனத் தெரிந்ததும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.