அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் 25 ரூபாய் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல, பகுதி மற்றும் கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இ-சேவை மையங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது முதற்கட்டமாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள 302 அரசு இ-சேவை மையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.