Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 7, 2016

கெஜ்ரிவால் பாகிஸ்தான் ஹீரோ...நமக்கு முகமது கைஃப் ஹீரோ!


பாகிஸ்தான் மீது கடந்த செப்டம்பர் 29ம் தேதி இந்தியா 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்தியது. இந்த தாக்குதலில் 38க்கும் மேற்பட்டத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லையென பாகிஸ்தான் மறுத்து வந்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சிலர் வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தரனர். அதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசித் தாக்குதலும் நடத்தப்பட்டது. 'மை வீசியவ்ர்களை கடவுள் ஆசிர்வாதிக்கப்பட்டும் ' என  கெஜ்ரிவால் பெருந்தன்மையுடன் சொல்லி விட்டார்.

இதற்கிடையே எல்லை கடந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ராணுவம் மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. எனினும் வீடியோ காட்சிகள் வெளியிட்டால் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால்  மத்திய அரசு வெளியிடவில்லை.

ஆனால், மத்திய அரசிடம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதாரம் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்தான் இப்போது பாகிஸ்தானில் ஹீரோ ஆகியிருக்கிறார். பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். ட்விட்டரில்  'ஸ்டேன்ட் வித் கெஜ்ரிவால்' என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு கெஜ்ரிவாலை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.. 'மோடியை எதிர்த்து துணிவுடன் கெஜ்ரிவால் ஆதாரம் கேட்டிருக்கிறார். அவரது உயிருக்கு இனி பாதுகாப்பில்லை' என ஒரு ட்விட் சொல்கிறது. 'அரவிந்த் கெஜ்ரிவால்தான் இந்தியாவின் ஒரே நேர்மையானத் தலைவர்' என்கிறது இன்னொரு ட்விட்.' டெல்லியில் கெஜ்ரிக்கு என்ன நடக்கிறதோ அதுதான் காஷ்மீர் மக்களுக்கு மோடி அரசு செய்கிறது ' என்கிறது மற்றொரு ட்விட். ஆக இப்போது, பாகிஸ்தானிலும் ஒரு இந்தியர்தான் ஹீரோவாகியிருக்கிறார்.

இதற்கிடையே , கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,' நமது ராணுவ வீரர்களின் ரத்ததில் மோடி குளிக்கிறார். அவர்களது தியாகத்தை தனக்கு சாதகமாக மோடி பயன்படுத்திக் கொள்கிறார்' என விமர்சித்திருந்தார். ராகுலின் விமர்சனத்தையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், 'நமக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் நமது ராணுவம் ஒரு நடவடிக்கையில் ஈடுபடும் போது அந்த விஷயத்தில் பிரதமருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்'' என் பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியினர் 'ஏ.கே. சல்யூட் இன்டியன் ஆர்மி ' என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கெஜ்ரிவாலின் பேட்டியை பரப்பிக் கொண்டிருந்தனர்.

ராகுலும், அரவிந்த்தும் அரசியல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃபின் ஒரே ட்விட் அவரை இந்தியாவின் ஹீரோவாக்கியது.  அந்த ட்விட் வழியாக லட்சக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

எல்லையில் பதற்றம் நிலவிய போது, அனைத்து ராணுவ வீரர்களுக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் கயீப், ''நமது படைவீரர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பஸ்சிலோ, ரயிலிலோ நமது படை வீரர்களை பார்த்தால் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுங்கள்' என ட்விட் செய்திருந்தார். இந்த ட்விட்டுக்கு லட்சக்கணக்கில் லைக் விழுந்ததுடன் ஷேரும் செய்யப்பட்டது. பல ட்விட்கள் 'நாங்கள் சல்யூட் அடித்து இடம் கொடுப்போம்' என்று தெரிவித்திருந்தன. சில ட்விட்கள் முகமது  கைஃபும் வாழ்த்தவும் செய்திருந்தன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.