உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல... புழு, பூச்சிகளில் ஆரம்பித்து பறவைகள், விலங்கினங்கள்... என்று உலகின் அத்தனை உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனாலும், மனித விலங்கு மட்டும்தான் தான் வாழ ஏனைய உயிர்களை அழிப்பதோடு, இயற்கையையும் அழித்துவருகிறான். இந்த வரிசையில், லேட்டஸ்ட்... ஹிமாச்சலப் பிரதேச அரசின் அறிவிப்பு.
ஹிமாச்சலப் பிரதேசத்தில், அதிகமாகப் பெருகிவரும் குரங்கு இனங்களைத் தடுக்கவேண்டும் என்பதற்காக குரங்களைக் கொலை செய்பவர்களுக்குப் பரிசுத் தொகை உயர்த்தி தரப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு பரபரப்பை பற்றவைத்திருக்கிறார்கள்.
ஹிமாச்சலப் பிரதேச வனப் பகுதிகளில், குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பல்கிப் பெருகியிருக்கும் இந்தக் குரங்குகள் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதோடு, சுற்றுலாப் பயணிகளையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி வருகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், மாநில அரசும் வனத்துறையும் இணைந்து குரங்குகளைக் கொல்பவர்களுக்கு பரிசுத் தொகை அளித்துவந்தது. அந்த வகையில், கடந்த மாதம் வரையிலும் ஒரு குரங்கின் தலைக்கு 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த பரிசுத்தொகை தற்போது 'ஒரு குரங்கைக் கொன்றால் 500 ரூபாய் பரிசு' என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேச மக்களோ, 'இந்து சமயத்தின்படி குரங்குகள் அனைத்தும் ஆஞ்சநேயரின் அவதாரங்கள். அதனால் குரங்குகளைக் கொல்லமாட்டோம்' என்று சொல்லி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அரசுத் தரப்போ, 'குரங்குகளைக் கட்டுப்படுத்த கருத்தடை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளின் உணவு மற்றும் உடமைகளை திருடிச் செல்வதால், அவர்கள் சுற்றுலாத் தளங்களைப் பார்க்க முடியாமல், திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பாகிறது. இதனைத் தவிர்க்கவே குரங்குகளைக் கொல்ல அனுமதி அளிப்பதோடு, பரிசுத் தொகையும் அறிவித்திருக்கிறோம்' என பதில் கொடுக்கின்றனர்.
அரசின் இந்த அறிவிப்பையடுத்து, தற்போது பலரும் குரங்கு வேட்டையில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், விலங்குகள் நலனுக்காகப் போராடிவரும் பீட்டா அமைப்பினரிடம், ஹிமாச்சலில் தினமும் கொன்று குவிக்கப்பட்டு வரும் குரங்குகள் குறித்துப் பேசினோம்...
''குரங்குகள் கொல்லப்படுவது உண்மையில் வேதனையளிக்கக்கூடிய விஷயம்தான். குரங்குகளைக் கொல்லாமல், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியினைக் கண்டுபிடிக்கவேண்டும்'' என ஒற்றை வரியில் பதில் கூறினர்.
''ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் மாடுகள் கொடுமைப் படுத்தப்படுவதாக போராடும் பீட்டா அமைப்பு ஒரு விலங்கு இனத்தையே அழிக்க முயற்சிக்கும் இந்த செயலுக்கு எதிர்ப்போ? போராட்டமோ செய்யவில்லையே ஏன்?'' என்ற நமது கேள்விக்கு, அனைவரும் சொல்லிவைத்தாற்போல் "சாரி... இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லமுடியாது'' என்று போன் இணைப்பைத் துண்டித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டும் தான் போராடுமா பீட்டா...?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.