Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

ஃபேஸ்புக், கூகுள் அலோவில் உங்கள் சாட் ரகசியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?


இன்றைக்கு சாப்பிடாமல் கூட இருந்து விடுவார்கள். ஃபேஸ்புக்கில் சாட் செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஜென் Z-களின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்காகியுள்ளது சமூக வலைதளங்கள். இதில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக்கிலும், அதற்கு போட்டியாக கூகுள் அறிமுகம் செய்துள்ள கூகுள் அலோவிலும் நீங்கள் செய்யும் சாட் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஃபேஸ்புக்:

மெஜென்ஜரில் நீங்கள் சாட் செய்யும் நபரை தேர்ந்தெடுங்கள். மெஜென்ஜரின் வலது ஓரத்தில் க்ளிக் செய்தால் சீக்ரர் கான்வர்ஷேஷன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யுங்கள். அதின் பின் அதில் தெரியும் நிமிட ஆப்ஷனை செலக்ட் செய்தால் 5 நொடி துவங்கி ஒரு நாளுக்குள் நீங்கள் அனுப்பிய செய்தி சம்பந்தப்பட்ட நபர் படித்தவுடன் மறைந்துவிடும். இந்த கால அளவை நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். தற்போது உங்கள் சாட் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். லாக் போடாமல் போனை யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு போகலாம் அவ்வளவு ரகசியமாக இருக்கும் உங்கள் சாட் என்கிறது ஃபேஸ்புக்.





         

கூகுள் அலோ:

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களுக்கு போட்டியாக கூகுள் அறிமுகம் செய்திருக்கும் கூகுள் அலோவிலும் உங்கள் சாட் ரகசியத்தை பாதுகாக்க முடியும். கூகுள் அலோவில் இன்காக்னிட்டோ மோட் ஆன் செய்து சாட் செய்தால் தானாகவே அந்த செய்தி  5 நொடி துவங்கி ஒரு வாரம் வரை நாம் தேர்வு செய்யும் நேரம் வரை மட்டுமே எதிர்முனையில் இருப்பவருக்கு தெரியும். அதன் பின் தானாகவே அந்த தகவல் மறைந்துவிடும்.

       




இனிமே ஆபிஸ் சீக்ரெட் ஆரம்பிச்சு ரகசியமா நண்பர்களிடம் யார்கிட்டயும் சொல்லாதனு சொல்லுற விஷயம் வரை எல்லாத்தையும் பாதுகாப்பா அனுப்புங்க பாஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.