Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 28, 2016

குணத்தை, நடத்தையை மாற்றுமா வண்ணங்கள்?


`வண்ணங்கள் வெறும் அழகை மட்டும் பிரதிபலிப்பதில்லை. ஒருவர் குணத்திலும் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன! அதனால் அறைக்கு வண்ணம் தீட்டும்போதும், ஆடையைத் தேர்வு செய்யும்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே, நிறங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியம். தெரிந்துகொள்வோமா?

மஞ்சள்: மூளைச் செயல்பாட்டைத் தூண்டும்; நரம்புமண்டலத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும். சுயமரியாதை, சுயக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும்.


பச்சை: மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக்கி, புத்துணர்ச்சி, சுயக்கட்டுப்பாடு மற்றும் மனதுக்கு இணக்கமான உணர்வுகளைத் தரும். மனஅழுத்தம், தடுமாற்றம், பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். தங்கள் அறையில் வெளிர் பச்சை நிறத்தை பூசலாம். அடர் பச்சை வேண்டாம்.


நீலம்: அமைதியையும் நிதானத்தையும் அளிக்கும். அடக்கம் உள்ளவராகக் காண்பிக்கும். உள்ளுணர்வைத் தூண்டும். படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தம், மனப்பதற்றம், தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் தங்கள் படுக்கை அறையில் இந்த வண்ணத்தைப் பூசலாம்.


ஊதா: மனதையும் நரம்புகளையும் அமைதிபடுத்தும். ஞானம், ஆன்மிக உணர்வைத் தரும். படைப்பாற்றலை ஊக்குவிக்கும். பதற்றம், தூக்கமின்மை, கொந்தளிப்பான மனநிலை உள்ளவர்கள் தங்கள் அறையில் இந்த வண்ணத்தைப் பூசலாம்.


இளஞ்சிவப்பு: எதிர்த்துப் போராடும் ஆற்றலைத் தரும். ஊக்கம், எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கையைத் தரும். ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும்; உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தரும்.


சிவப்பு: மகிழ்ச்சியைக் கூட்டும்; சக்தியைத் தூண்டும்; ரத்த அழுத்தம், மூச்சுவிடுதல், இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு ஆகியவற்றைச் சீராக்கும். பயம், பதற்றம் நீங்கும். அதிக கோபம் கொள்பவர்கள் இந்த நிறத்தைத் தவிர்ப்பது நல்லது.


ஆரஞ்சு: உடல் மற்றும் மனதைத் தூண்டும். புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். படைப்பாற்றல், மகிழ்ச்சியைத் தூண்டும். சமூகத்தோடு இணைந்து வாழும் உணர்வை ஏற்படுத்தும். மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் தோன்றுபவர்கள் தங்கள் அறையில் இந்த நிறத்தை அடிக்கலாம்.


கறுப்பு: ஓய்வு மனநிலை மற்றும் வெறுமையை அளிக்கும். தனக்குள்ளே ஆற்றல் பெருகுவதாகவும், எதிலும் சாதகமான சூழல் நிலவுவதாகவும் ஓர் எண்ணத்தை ஏற்படுத்தும்.


வெண்மை: மனத் தெளிவுக்கு உதவும். தடைகளையும் கலக்கத்தையும் சரிசெய்ய நமக்கு ஊக்கமளிக்கும். எண்ணம் மற்றும் செயல்பாடுகளில் துல்லியமான தன்மையை உண்டாக்கும். புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் தரும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.