Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

பிஎம்டபிள்யூவை திருப்பிக் கொடுத்தார் தீபா கர்மாகர்... ஏன்?


திரிபுரா சாலைகளில் ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் பரிசாக வழங்கப்பட்ட பிஎம்டபிள்யூ காரை திரும்ப கொடுத்துவிட்டு வேறு கார் வழங்குமாறு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகரின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்  இறுதிச்சுற்று வரை முன்னேறினார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தான். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, சாக்ஷி மலிக், பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் தீபா ஆகியோருக்கு சச்சின் தலைமையில் ஹைதரபாத்தில் நடந்த விழாவில் பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், திரிபுராத் தலைநகர் அகர்தாலாவில் வசித்து வரும் தீபா கர்மாகருக்கு இந்த விலைஉயர்ந்த காரால் எந்த பயனும் இல்லை. இதனால் வீட்டில் நிறுத்தியே வைத்திருந்தார்.. இந்த காரை ஓட்ட டிரைவரும் கிடைக்கவில்லையாம். திரிபுரா மாநிலச் சாலைகளில் இந்த காரை ஓட்டியும் செல்ல முடியாத நிலை. இதையடுத்து காரை திருப்பிக் கொடுத்த தீபா கர்மாகர், அதற்கு பதிலாக வேறு காரை கேட்டுள்ளார்.

இது குறித்து தீபாவின் தந்தை டூலால் கர்மாகர் கூறுகையில், '' நாங்கள் காரை திருப்பிக் கொடுத்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அது தவறு. இந்த காருக்கு பதிலாக வேறு காரை மாற்றித் தருமாறு கேட்டுள்ளோம். அகர்தலாவில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டவும் டிரைவர் கிடைக்கவில்லை. சாலைகளும் படுமோசமாக உள்ளன. இந்த காருக்கான சர்வீஸ் சென்டரும் இல்லை. ஹைதரபாத் பேட்மின்டன் அசோசியேசனிடம் இந்த காருக்கு ஈடான  பரிசுத்தொகயை தருமாறு கேட்டுள்ளோம். நாங்கள் டெல்லி , கொல்கத்தா போன்ற நகரங்களில் வசித்தால் இதுபோன்ற கார்களை பயன்படுத்த முடியும். அகர்தலாவில் இதுவெல்லாம் சாத்தியமில்லை'' என்றார்.‘

தீபாவின் பயிற்சியாளர் பிஷேவார் நன்டி, ''இது தீபாவின் தனிப்பட்ட முடிவல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு '' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.