பல துறைகளிலும் தன்னுடைய முதலீடுகளைக் குவித்து தொழில்களை விஸ்தரிப்பதில் டாடா தனி ரகம்.இந்த நிலையில் டாடா குழுமத்தின் தலைவராக கடந்த நான்கு ஆண்டுகள் இருந்த சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியிலிருந்து அதன் இயக்குநர் குழு நீக்கியிருப்பது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனென்றால், அதற்கென எவ்விதமான காரணத்தையும் டாடா குழுமம் அறிவிக்கவில்லை. இடைக்கால தலைவராக மீண்டும் ரத்தன் டாடாவே நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
24-ம் தேதி நடந்த கூட்டத்தில் சேர்மென் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் சைரஸ் மிஸ்திரி.சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை , டாடாவின் இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கிறார் சைரஸ் மிஸ்திரி.
கடிதத்தில் ரத்தன் டாடாவை பல இடங்களில் விளாசி இருக்கிறார்.அதே போல், நஷ்டத்தில் இருக்கும் டாடா நானோ திட்டத்தை மூடாமல் இழுத்தடிப்பது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.நானோ திட்டத்தில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கு பொருள் அனுப்பப்படுகிறது.அந்த நிறுவனத்தில் ரத்தன் டாடாவிற்கு பங்குகள் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதில், " 24-ம் தேதி நடந்த போர்ட் மீட்டிங், எனக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஒரு நிறுவனத்தின் சேர்மென் பொறுப்பில் இருக்கும் ஒரு நபரை, எந்தவித காரணமும் சொல்லாமல், அந்த நபரிடம் எந்தவொரு விளக்கமும் பெறாமல் நீக்கி இருப்பது கார்ப்பரேட் வரலாற்றிலேயே விசித்திரமானது. இப்படி டாடா குழுமம் செய்வது, அதன் மீது இருக்கும் நம்பிக்கைத் தன்மையை குலைக்கும். டாடா நானோ சிறப்பாக செல்ல வேண்டுமெனில் டாடோ மோட்டார்ஸை நிறுத்தி இருக்கவேண்டும். அதன் இழப்பு 1000 கோடியை நோக்கி டாடாவை கீழ் இழுத்து சென்றது. ஏர் ஆசியாவில் 22 கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது " என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.