தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து உண்மை விவரங்களை வெளியிடவேண்டும் என்றும், அவர் குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்–அமைச்சராக ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
ஆஸ்பத்திரியில் அனுமதி
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22–ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதல்–அமைச்சர் நலமாக உள்ளார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அதே நேரம், லண்டனில் இருந்து சிறப்பு டாக்டர் வந்து, அவருக்கு சிகிச்சையும் அளித்து வருகிறார். முதல்–அமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலவரத்தை இதுவரை வெளியிடவில்லை.
இதனால், அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருவதால், தமிழக மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகின்றது.
மக்கள் மத்தியில் குழப்பம்
ஜெயலலிதா சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு சாலையை மறித்து பூஜைகளை நடத்துகின்றனர். இதற்கு போலீசாரும் அனுமதி வழங்குவதால், அப்பகுதியில் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால், அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல முடியவில்லை.
தமிழக முதல்–அமைச்சர் குறித்த அவதூறு செய்தி அவ்வப்போது பரவுவதால் கிரீம்ஸ் சாலை, திருவேற்காடு பகுதிகளில் சிலர் கடைகளை அடைக்கச் சொல்லி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
ஜெயலலிதாவை தமிழக கவர்னர், மத்திய மந்திரி ஆகியோர் நேரில் சென்று பார்த்ததாக கூறப்பட்டாலும், அவர்களும் உடல் நிலை குறித்து தெளிவாக எதுவும் கூறவில்லை.
ஆலோசனை கூட்டம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை செய்கிறார். அதே நேரம், முதல்–அமைச்சருடன் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்வதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்த வண்ணம் முதல்–அமைச்சர் அரசு நிர்வாகத்தை கவனிப்பதாகவும் தலைமை செயலாளர் கூறுகிறார்.
ஆனால், அதிகாரிகளை நேரில் சந்தித்து முதல்–அமைச்சர் பேசியது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், முதல்–அமைச்சரின் உடல் நிலை குறித்து உண்மை நிலவரத்தை வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசின் கடமை
இந்த சூழலில் முதல்–அமைச்சரின் உடல் நிலை குறித்தும், காவிரி பிரச்சினை போன்ற முக்கிய விஷயங்களில் தமிழக அதிகாரிகளுக்கு யார் தகுந்த உத்தரவை பிறப்பித்து வருகிறார்கள்? என்பதையும் விளக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.
எனவே, இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கடந்த அக்டோபர் 1–ந் தேதி தமிழக ஆளுநரின் தலைமைச் செயலாளர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என்னுடைய மனுவை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
தற்காலிக முதல்–அமைச்சர்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பரிபூரணமாக உடல்நலம் பெற்று நலமுடன் பணிக்கு திரும்பும் வரை தற்காலிகமாக ஒருவரை முதல்–அமைச்சராக நியமிக்கவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்.
அதேபோல, தமிழக முதல்–அமைச்சரின் உடல்நிலை குறித்து உண்மை நிலவரங்களை, புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோரிடம் டிராபிக் ராமசாமி நேற்று கோரிக்கைவைத்தார். இதையடுத்து இந்த வழக்கை நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.