மனைவியையும் மகளையும் புற்றுநோயால் இழந்த நான், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பேனா என ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் குமுறியுள்ளார்.
1990-ம் ஆண்டு வாக்கில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பியர்ஸ் பிராஸ்னன். அயர்லாந்தைச் சேர்ந்த பிராஸ்னன், ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்தவர்களிலேயே கவர்ச்சியானவராக கருதப்படுபவர். சமீபத்தில், பியர்ஸ் பிராஸ்னன் பான் மசாலா விளம்பரத்தில் தோன்றியதாக சர்ச்சை எழுந்தது. 'பான் பாகர் ' டப்பாவுடன் பிராஸ்னன் தோன்றுவதுபோல விளம்பரம் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அந்த விளம்பர வீடியோவுக்கு இசையமைத்து இருந்தார். அதில், 'எதிரிகளை பான் பாகர் டப்பாவை வைத்து அடித்து துவைக்கிறார் பிராஸ்னன். முடிவில் 'எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள பான் உதவுகிறது' என்கிறார். அத்துடன் 'Class never goes out of style.' என்ற வார்த்தையையும் பியர்ஸ் பிராஸ்னன் பயன்படுத்துவது போல் வீடியோ முடிவடைகிறது.
இதையடுத்து, பிராஸ்னன் பான் மசாலா விளம்பரத்தில் நடித்து விட்டதாக ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் கடும் கண்டனம் எழுந்தது. எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து பியர்ஸ் பிரசன்னன், 'பீப்புள்' பத்திரிகைக்கு அறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் பிராஸ்னன் கூறியிருப்பதாவது,
'' இந்திய தேசம் மீதும் அதன் மக்கள் மீதும் மிகுந்த பற்றும் நேசமும் வைத்துள்ளேன். கையில் பான் டப்பாவுடன் இருப்பது போன்ற விளம்பரம் வெளியிடப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதனாக சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்பு உணர்வில் ஈடுபட்டு வருகிறேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் புகையிலை பொருளுக்கு விளம்பரத்தில் தோன்றுவதாக என்னிடம் தெரிவிக்கவில்லை. இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளின் எந்த விளம்பரத்திலும் நடிக்க நான் ஒப்பந்தத்தில் ஈடுபடவில்லை.
புற்று நோய் அளிக்கும் வேதனை குறித்து எனக்கு நேரடி அனுபவமே உண்டு. எனது மனைவியை புற்று நோயால் பறிகொடுத்தேன். எனது மகளையும் அந்த நோய் என்னிடம் இருந்து பறித்துக் கொண்டது. எனது நண்பர்களை அந்த நோயால் இழந்திருக்கிறேன். அது முதலே உலகம் முழுக்க புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் உள்ளேன். உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்காத எந்த பொருளின் விளம்பரத்திலும் எனது புகைப்படத்தை அனுமதிக்க ஒப்புக் கொண்டிருந்தேன்.'' என தெரிவித்துள்ளார்.
பிராஸ்னனின் அறிக்கை குறித்து' பீப்புள் ' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ''பான் மசாலா விளம்பரத்தில் உடனடியாக தனது புகைப்படத்தை நீக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பிராஸ்னன் கேட்டுக் கொண்டுள்ளார் '' என கூறியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து பான் பாகர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மேக் இன் இந்தியா ' திட்டத்தின் கீழ், பான் பாகர் விளம்பரத்தில் பியர்ஸ் பிராஸ்னன் தோன்றியதற்காக பெருமைப்படுகிறோம். இதனால், எங்கள் தயாரிப்பை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். சந்தையில் நல்ல இடத்தை பிடிக்க வாய்ப்பு பெருகும். ஆனால், பியர்ஸ் பிராஸ்னன் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. எங்களது தயாரிப்பு சுண்ணாம்பு, பாக்கு, ஏலக்காய், சந்தன எண்ணெய், ஜீரகம் போன்றவற்றால் கலந்து செய்யப்பட்ட ஒரு கலவை. அதில் எந்த விதத்திலும் புகையிலையோ அல்லது நிக்கோடினோ இடம் பெறவில்லை. எங்களது தயாரிப்பு குறித்து விழிப்பு உணர்வு இல்லாமல் மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட வேண்டாம் ''என கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.