October 15, 2016
“முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” : ரோசய்யா
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவை பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் சென்று பார்த்து வருகின்றனர்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் தொடங்கி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லீ, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களும் முதலமைச்சரை சென்று பார்த்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்தார். மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்த ரோசய்யா, ஜெயலலிதா நலம்பெற வேண்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
“முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” : ரோசய்யா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.