October 4, 2016
உன் கன்னங்களோ காஷ்மீர் ஆப்பிள்.. நர்சை ஆபாசமாக வர்ணித்த சாமியார் ஆசாராம் பாபு!
கடந்த 1997-2006 ஆம் ஆண்டு ஆசாரம் சாமியார் தலைமையில் ஆஸ்ரமம் ஒன்று செயல் பட்டு வந்தது. அப்போது ஆஸ்ரமத்தில் ஆசாரம் பாபு சாமியார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் தங்கி வந்த அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் போலீசார் சிறையில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சாமியாரோ தனக்கு இங்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் சாமியார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் சாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சாப்பிடுவதற்காக மருத்துவமனை செவிலியப் பெண் ஒருவர் பிரட்டின் மீது வெண்ணய் தடவி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் செவிலியப் பெண்ணிடம், பிரட்டுக்கு வெண்ணை எதற்கு நீயே ஒரு உருகும் அழகிய வெண்ணை, உன் கன்னங்களோ இனிய சாறு ஊறும் காஷ்மீர் ஆப்பிள் என்றும் தக்காளியை போன்று உள்ளது எனவும் வர்ணித்துள்ளார்.
இதை செவிலியப் பெண் மருத்துவமனை நிர்வாகத்திடன் தெரிவித்ததால், மருத்துவமனை நிர்வாகம் சாமியாரை கண்டித்துள்ளது.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு பெண்களே உங்களை பலாத்காரம் செய்ய முற்படும் போது கடவுளின் பெயரை உச்சரிப்பதோடு, பலாத்காரம் செய்ய முற்படும் நபர் மீது கையை வைத்து நான் உன்னை சகோதரனாக கருதுகிறேன் என கூறுங்கள் என்று சர்ச்சையை கிளப்பி சாமியார் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உன் கன்னங்களோ காஷ்மீர் ஆப்பிள்.. நர்சை ஆபாசமாக வர்ணித்த சாமியார் ஆசாராம் பாபு!
Reviewed by மறத்தமிழன்
on
October 04, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.