Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

உள்ளாட்சி தேர்தல் மேல்முறையீடு மனு மீது பிற்பகலில் விசாரணை



சென்னை: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் #LocalBodyElections அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதலே அதில் சர்ச்சைகள் நிலவின. இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த இந்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது பஞ்சாயத்து ராஜ் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பன உள்ளிட்ட பல காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அட்டவனையை ரத்து செய்ய கோரி திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த அமனு மீதான விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதே சமயம், திமுக சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பிற்பகல் 2.15 மணியளவில் இந்த வழக்கை விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.