Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

நாளை மறுநாள் முதல் சென்னை உயர் நீதிமன்றம் விடுமுறை



சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை கால நீதிமன்றம் 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும். விடுமுறை கால நீதிபதிகளாக நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர்.
அதேபோல், நீதிபதிகள் டாக்டர் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.