Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

விபச்சார விடுதி; சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கும் விளக்கமறியல்



விபச்சார விடுதி நாடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

நேற் (23) கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் மற்றும் குறித்த விடுதியில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் ஒரு ஆண் அடங்கலாக நான்கு பேரையும் மட்டக்களப்பு பொலிசார் இன்று (24) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

நேற்றைய தினம் (23) மட்டக்களப்பு மாநாகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனால் நடாத்தப்பட்டு வந்த, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள அவரின் வீட்டை அண்டியதான விடுதியை மட்டக்களப்பு பொலிசார் முற்றுகையிட்டனர்.

இந்த விடுதியில் விபச்சார நடவடிக்கை இடம் பெறுவதாக மட்டக்களப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிசார் இம்முற்றுகையை மேற்கொண்டனர்.

இம்முற்றுகையின் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள், மட்டக்களப்பு மாநாகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீதா உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்களை விசாரணை செய்த பொலிசார், இவர்களில் மூவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன் முன்னாள் மேயர் மற்றும் அங்கு இருந்த இரண்டு பெண்கள், விடுதியின் முகாமையாளர் ஆகிய நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் கண்ணங்குடா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட ஆண்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் மட்டக்களப்பு பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

இது தொடர்பாக விசாரணைகளை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.