Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

திருவண்ணாமலையில் முதல்வர் குணமாக வேண்டி நடைபெற்ற பால்குட ஊர்வல நெரிசலில் சிக்கி பெண் பலி: காயமடைந்



முதல்வர் ஜெயலலிதா குணமாக வேண்டி திருவண்ணாமலையில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பெண்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் அடைய வேண்டி, திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் 5,001 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற் றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.
அதன்படி, திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங் களில் இருந்து லாரி, மினி லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங் கள் மூலம் நேற்று பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.
திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்படத் தயாரானது. கோயில் உள்ளே பெண்களுக்கு பால்குடம் வழங்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயங்கி விழுந்து மிதிபட்டனர்.
அவர்களை மீட்டு, திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அவர் களில் திருவண்ணாமலை வ.உ.சி. 4-வது தெருவைச் சேர்ந்த சம்மந்தம் மனைவி கமலாம்பாள்(60) உயிரி ழந்தார். மேலும் படுகாயமடைந்த அமிர்தம்(55), ஆண்டாள்(45) உள்ளிட்ட 16 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகலறிந்த திருவண் ணாமலை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பொன்னி, கோட் டாட்சியர் உமா மகேஸ்வரி ஆகி யோர் பச்சையம்மன் கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
பால் குட ஊர்வலத்தில் 5000 பேர் திரள்வார்கள் என்று தெரிந்திருந்தும், தக்க பாதுகாப்பு நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்ளாததால் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவரை தூக்கிச் செல்லும் பெண்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.