Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 11, 2016

ஆண் குழந்தையை நாயைப் போன்று நடத்தி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தாய்



மனிலா: பிலிப்பைன்ஸில் தாய் ஒருவர் தனது மகனின் கழுத்தில் கயிறை கட்டி அவரை நாய் போன்று நடத்தி அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் மனைவி தனது ஆண் குழந்தையை நிர்வாணமாக்கி அவரின் கழுத்தில் கயிறை கட்டி ஒரு கோப்பையில் நாய் உணவை வைத்து தான் பெற்ற குழந்தையை நாய் போன்று நடத்தியுள்ளார். அதை அவர் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.


இதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த அயர்லாந்தைச் சேர்ந்த சமூக சேவகியான லர்லீன்(46) என்பவர் இது குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். பிலிப்பைன்ஸ் போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து தங்கள் காவலில் எடுத்தனர். அவரின் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுள்ளனர்.



இது குறித்து லர்லீன் கூறுகையில்,
நான் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகையில் குழந்தையை நாய் போன்று நடத்திய புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பார்த்த உடன் என் ரத்தம் கொதித்தது. இது போன்ற கொடுமைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.