October 19, 2016
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக தூத்துக்குடியில் ஒருவர் கைது
முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பியதாக கூறி தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனிடையே முதல்வர் உடல்நிலை பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த சாகாயம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள விவேகானந்தர் காலனியை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளரான சகாயம் முகநூலில் வதந்தி பரப்பியதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக தூத்துக்குடியில் ஒருவர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.