October 31, 2016
மாற்றம்_வேண்டும்
குறைந்தபட்சம் அரசு விடுமுறை தினங்களின் போது டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்..
ஞாயிற்றுக்கிழமைகளிலும் சேர்த்து தான்.
அதே போல டாஸ்மாக் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும். டாஸ்மாக்களில் உள்ள பார்களை மூடி விட்டு, வேண்டுமென்றால் வாங்கிக்கிட்டு போய் வீட்டில் குடி என்று கூற வேண்டும். பொது இடங்களில் எவனாவது குடித்தால் உடனடி கைது செய்ய வேண்டும்.
விடுமுறை தினங்களில் கடையைத் திறந்து வைத்து விற்பனை ஏகத்துக்கும் நடக்கிறது என்று தகவல் வெளியிடுவதெல்லாம் பெருமைக்குரிய விஷயமா என்ன மானங் கெட்டதனமா இல்லையா?
காந்தி ஜயந்தி அன்று கடையை மூடுகிறார்கள். காந்தியடிகளுக்கு மதிப்பு கொடுக்கிறார்களாம்.
அப்போ தீபாவளி அன்று கடையை மூட மாட்டேன் என்கிறீர்களே ஏன்? நரகாசுரனுக்கோ அல்லது அவனைக் கொன்ற கடவுளுக்கோ மதிப்பு தர மாட்டீர்களா? என்னாங்கய்யா லாஜிக் உங்க லாஜிக்?
ஒவ்வொரு தடவை விடுமுறை தின முடிவின் போதும் இரவு எத்தனை சாலை விபத்துகள் நிகழ்கின்றன?
டூ வீலர்களில் மூன்று பேர் போனதைத் தாண்டி இப்போதெல்லாம் 4 பேர், 5 பேரெல்லாம் போகிறானுங்க. அதுவும் இளைஞர்கள்.. குறிப்பாக படிக்கும் மாணவர்கள். அதுவும் படு வேகமாக.. எந்தவொரு சிக்னலையும், சாலை விதிகளையும் மதிக்காமல். அப்படியே கொத்தாகப் பிடித்து வாழ்நாள் முழுவதும் அவனுங்களுக்கு லைசன்ஸ் கிடையாது என்று ரத்து செய்ய வேண்டும். முடிந்தால் அவனுங்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்து அப்படி அலைய விட்டிருக்கும் அனைவருடைய பெற்றோர்களுக்கும் சேர்த்து தான்.
கண்ட கபோதிகள் தங்கள் சிற்றின்பத்திற்காக சாராயம் குடித்து விட்டு வண்டி ஓட்டுக் கொண்டு வந்து விபத்துகளை ஏற்படுத்துவார்கள். ஒன்றும் தெரியாத அப்பாவிகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
இதலாம் இந்த அரசாங்கம் கண்களில் தென்படவில்லையா?
இல்லை கஜானா நிறம்பினால் போதும் மக்கள் எக்கேடு கேட்டால் என்னா என்ற மெத்தத்தில் செயல் படுகிறதோ இன்றைய அதிகார வட்டம்???
மாற்றம்_வேண்டும்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.