Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

மனைவி குளிப்பதை படம் எடுத்து ‘அந்த’ விஷயத்திற்கு அழைத்தான் சகோதரன்..அவனுக்கு அவர்கள் கொடுத்த தண்டனை.



அண்ணன் தம்பி போல பழகிய ஒருவன் இப்படி செய்வான் என்று அன்புவோ அவன் மனைவியோ கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் எப்போது வேண்டுமானாலும்  வீட்டிற்க்கு  வரும் உரிமை கொடுத்த ஒருவனா..? அன்பு அதிர்ந்தே போனான்.

சிஸ்டர், சிஸ்டர் என்று வாய் நிறைய அழைப்பான் கவாஸ்கர். மனைவியும் அண்ணா என்று தானே அழைத்தாள். அப்படி பட்டவன் மனைவி தனியாக குளித்துக் கொண்டிருப்பதை படம் எடுத்தான். அந்த படத்தைக் காட்டியே தனது காம இச்சைக்கு இணங்க அழைத்தான் கவாஸ்கர்….! மிரட்டவும் ஆரம்பித்தான்..

இவனை என்ன பண்ணாலம்…திட்டம் தீட்டினார்கள் இவனுக்கு அரபு நாட்டு பாணியில் தண்டனை கொடுக்க வேண்டும்.

தனது மனைவி நந்தினியுடன் சென்னையில் இருந்து புதுவைக்கு காரில் சென்றார். அவர்களுடன், ராயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.

கவாஸ்கர் வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று அவரிடம் நைசாக பேசிய அன்புவும், நந்தினியும் வெளியில் செல்லலாம் என கூறி அழைத்துச் சென்றனர்.

பின்னர் காருக்குள் வைத்தே நந்தினியின் ஆபாச படத்தை இணைய தளத்தில் ஏன் வெளியிட்டாய்? என கேட்டு கவாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். காருக்குள் வைத்தே அவரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் கார் புதுவையில் இருந்து மகாபலிபுரம் நோக்கி சீறிப் பாய்ந்தது. மகாபலிபுரத்தில் பட்டிப்புலம் என்ற பகுதியில் மறைவான இடத்துக்கு கார் சென்றது. பின்னர் காரில் இருந்து கவாஸ்கரை கீழே இறக்கினர்.

 அவன் கை கால்களை கட்டிப் போட்டனர். சுற்றிலும் இருந்து நின்று கொண்டு கருங்கல்லை அவன் மீது சர மாறியாக எறிந்தனர். துடித்து கதறினான் கவாஸ்கர். உடம்பில் ஒரு இடம் விடாமல் ரத்தம் வழிந்தது. மீண்டும்மீண்டும் தலையில் கற்களால் தாக்கினர்..!

அதன் பின் அவன் கழுத்தில் சுறுக்கு கயிற்றை கட்டி மரத்தில்  தொங்க விட்டனர். இதில் கவாஸ்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானான்.

கவாஸ்கர் காணாமல் போனதை அறிந்து அவரது உறவினர்கள் புதுவை கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கவாஸ்கர் சென்னை ராயபுரத்தில் வசித்து வந்தது தெரிய வந்தது.

அதே பகுதியில் வசித்த அன்பு மற்றும் நந்தினி ஆகியோர் புதுவைக்கு வந்து கவாஸ்கரை காரில் அழைத்துச் சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அன்புவை தேடிக்கண்டு பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கவாஸ்கரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரது நண்பரான கார்த்திக்கும் கைதானார்.

தன்னை ஆபாச படம் எடுத்தவரை பழி தீர்க்கும் நோக்கத்தில் அன்புவின் மனைவி நந்தினியும் இக்கொலைச் சம்பவத்தின் போது உடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் கவாஸ்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கணவர் அன்பு கைது செய்யப்பட்டதை அறிந்ததும், நந்தினி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தயவுசெய்து புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களை வீடு வரை அனுமதிக்காதீர்கள்….!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.