Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

​மீனவ கிராமத்தில் கோஷ்டி மோதல்!



கன்னியாகுமரி அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவ கிராமத்தில் மது, பாபு ஆகிய இரண்டு கோஷ்டிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென மது தலைமையிலான கும்பல் பாபு, ததேயூஸ் ஆகியோரின் வீடு புகுந்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியுள்ளது.
மேலும் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி விட்டு தப்பியோடி விட்டது. இதில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து 10க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.