October 27, 2016
தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்பாட்டம்!
தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்கிட வலியுறுத்தி, கோவில்பட்டியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலூகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் செல்லசாமி தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் இல்லாத ஊழியர்களுக்கு குருப் இன்சூரன்ஸ் ஈஎஸ்ஐ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி,மதுரை, விருதுநகர், சிவகங்கை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த குடிநீர் வடிகால் ஊழியர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்பாட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.