Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது



தமிழக இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிமுக, திமுக, பாமக, பாஜக கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரவை முத்து, தஞ்சையில் வி.அப்துல்லா சேட், திருப்பரங்குன்றம் தொகுதியில் தனபாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று முறைப்படி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அவர்களது தொகுதிகளில் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.