Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 18, 2016

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: திமுக



இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று திமுக அறிவித்துள்ளது.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் விருப்ப மனுக்க பெறப்படும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர் நேர்காணல் வரும் 21ஆம் தேதியும் அன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும், விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.