Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

பொது சிவில் சட்டத்தை எதிர்க்க ஆதரவு கோரும் இஸ்லாமிய அமைப்பினர்!



பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோருவதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்தனர்.
மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட உள்ள பொது சிவில் சட்டத்திற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
தங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து  ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இஸ்லாமியக் கூட்டமைப்பினர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தங்களது போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவைக் கோரினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.