Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

ஐ.பி.எல் உடன் கைக்கோர்க்கும் ஃபேஸ்புக்



ஐ.பி.எல். டிஜிட்டல் ரைட்ஸ்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜியோ,அமேசான்,ட்வீட்டர், ஸ்டார் குழுமம், சோனி குழுமம் ஆகியவைகள் ஐ.பி.எல் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கியுள்ளன. இந்த லிஸ்டில் ஃபேஸ்புக்கும் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.பி.எல். போட்டிகளின் போது ஃபேஸ்புக்கில் செம ரீச்சாம். ஐ.பி.எல் தொடர்பான பதிவுகள், கமெண்ட்ஸ்கள் மில்லியனில் குவிவதால் அதன் டிஜிட்டல் ரைட்ஸை வாங்குவதற்கு ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக இந்தாண்டு ஐ.பி.எல்-ன் போது மட்டும் அது தொடர்பாக 360 மில்லியன் பதிவுகள், கமெண்ட்ஸ்கள், லைக்குகள் கொட்டியதாம். மேலும், ஐ.பி.எல். தொடர்பான வீடியோக்கள் 140 மில்லியன்கள் வ்யூவ்ஸ்க்கு சென்றதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.