October 20, 2016
பெற்றோர் கொலை செய்ய முயற்சிப்பதாக மகள் பரபரப்பு புகார்..!
காதல் திருமணம் செய்து கொண்ட தன்னை கொலை செய்ய, தனது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக, பனையூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பனையூரைச் சேர்ந்த ரூபசந்திரன் என்பவரது மகள் ஸ்லோமியா, புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்த அறிவழகன் என்பவரை காதலித்து வந்தார். இதற்கு ஸ்லோமியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் இருவரும் கடந்த 14-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் இருவரும், புதுச்சேரி கிழக்கு காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி முன்னிலையில் தஞ்சம் அடைந்து, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழக்குமாறு மனு கொடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்லோமியா, தங்களை கொலை செய்ய, தனது பெற்றோர் திட்டமிட்டு வருவதால், காவல் துறையில் தஞ்சமடைந்ததாக தெரிவித்தார்
பெற்றோர் கொலை செய்ய முயற்சிப்பதாக மகள் பரபரப்பு புகார்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.