Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 12, 2016

காதலனின் ஆசை வார்த்தைகளால் சீரழிக்கப்பட்ட பள்ளி மாணவி…. ஏமாற்றத்தால் எடுத்த விபரீத முடிவு….



தக்கலை அருகே காதலன் ஏமாற்றியதால் பள்ளி மாணவி மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலையை அடுத்த கீழ மூலச்சல் பகுதியைச் சேர்ந்த குமாரதாஸின் மகள் ஜெனிபர் (17) , அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ஜெனிபர், இருதினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் ஜெனிபரை தேடியப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மருந்துகோட்டை மலை பகுதியில் ஜெனிபர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் சுமார் 90 அடி ஆழ பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , ஜெனிபரின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜெனிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தியப்போது, ஒரு வாரத்திற்கு முன்பு மகளிர் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. அதில் தனுஷ் என்பவர் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார் .
இதனை தொடர்ந்து தனுஷ்சை கைது செய்த போலீசார், மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.