Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 6, 2016

நெல்லை அருகே காதல் விவாகரத்தில் ஒருவர் சாதி ஆணவப்படுகொலை!



திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலை அடுத்த மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் மகள் கஸ்தூரி, செங்கோட்டையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கலில் படித்துபோது,  அங்கு செட்டிநாயக்கர்பட்டியை சேர்ந்த சிவகுருநாதன் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சிவகுருநாதன் அடிக்கடி கஸ்தூரியின் ஊருக்கு வந்து அவரை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை மேலஇலந்தைகுளம் கிராமத்தில் கஸ்தூரியை பார்ப்பதற்காக சிவகுருநாதன் தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.

இதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் சிவகுருநாதனை ஒட ஓட விரட்டியது. அவர் கும்பலிடம் இருந்து தப்பி அங்குள்ள அய்யாவழி கோயிலுக்குள் புகுந்தபோது, அவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சிவகுருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சாதி ஆணவக் கொலையா  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.