Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

​தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது!



தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 9.30 மணி அளவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக முதலமைச்சரின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஒ. பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்த பிறகு, முதன்முறையாக இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதில், காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.