October 12, 2016
ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கீடு: ஸ்டாலின் வரவேற்பு!
மாநிலத்தின் நிர்வாக நலனுக்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலன்பெற்று திரும்பும் வரை, பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுத்ததற்கு, மக்களின் நலன் கருதாத பலர் தேவையற்றது என கூறி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வரும் 17ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளதாகவும், இந்நிலையில், மாநிலத்தின் நிர்வாக பிரச்னைகளை கலந்து ஆலோசிக்க பொறுப்புள்ள ஒரு அமைச்சரவை வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவையை கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், மாநிலத்தின் நிர்வாக நலனுக்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சரின் பொறுப்புகளை ஒதுக்கி தமிழக ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கையை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்பதாக முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இலாக்காக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கீடு: ஸ்டாலின் வரவேற்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.