Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

கர்நாடகாவுக்கு மின்சாரம் தர எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி தலைமை அலுவலகம் முற்றுகை!



காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயம் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரியில் இருந்து தண்ணிர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் நெய்வேலி ஆர்ச் கேட்டிலிருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி விவசாய மற்றும் தொழிற்சங்கங்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம்  வழங்கக்கூடாது எனவும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தாக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.