Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

கருர் அருகே கள்ளகாதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை



கரூர் அருகே கள்ளகாதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (26). திரூப்பூரிலுள்ள தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பால சுப்பிரமணி வேலை பார்த்து வந்த பேக்கரிக்கு அருகே உள்ள மின்சார வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் ஏமலூரை சேர்ந்த சேகர் மனைவி ராஜாமணி(32).

ராஜாமணிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி வேலை செய்து வந்த பேக்கரி கடைக்கு அடிக்கடி ராஜாமணி வந்துள்ளார். அப்போது ராஜாமணிக்கும், பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இதனை அறிந்த இருவருடைய உறவினர்களும் அவர்களை கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ராஜாமணி காணாமல் போனார்.அவரை எங்கு தேடியும் காணவில்லை . இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் போலீசில் புகார் அளித்தார்.
இதனிடையே ராஜாமணியும், பால சுப்பிரமணியும் தென்னிலை அருகே உள்ள பாழடைந்த தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர வீசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.