Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

அரசு ஊழியர்களுக்கு இம்மாத சம்பள தேதி என்ன? புதிய அறிவிப்பு



தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதம் 30 அல்லது 31ஆம் தேதி சம்பளம் போடப்பட்டு வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் மட்டும் 28ஆம் தேதியே சம்பளம் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தீபாவளி இந்த மாதம் 29 ஆம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும், அரசு ஊழியர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. அதனை பரிசீலனை செய்து, இந்த மாதத்திற்கான சம்பளத்தை 28 ஆம் தேதி வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.