Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

பெட்ரோல், டீசலை அடுத்து சமையல் எரிவாயுவையும் கைப்பற்றிய ரிலையன்ஸ்



ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய அளவில் சமையல் எரிவாயு விற்பனையில் கால்பதித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், தற்போது சமையல் எரிவாயு விற்பனையையும் தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இந்த சமையல் எரிவாயு விற்பனையை மேற்கொண்டுள்ளதாக, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி, 4 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளைகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதாகக் கூறியுள்ள ரிலையன்ஸ், அதற்கான விலையை தெரிவிக்க மறுத்துவிட்டது. சோதனை முயற்சிக்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, சமையல் எரிவாயு விற்பனையை முழுவீச்சில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

தற்சமயம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற பொதுத்துறை நிறுவனங்களே சமையல் எரிவாயு விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், முதல்முறையாக, தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் சமையல் எரிவாயு விற்பனையில் கால் பதித்துள்ளது. அதேசமயம், மத்திய அரசின் மானிய விலை சமையல் எரிவாயு திட்டத்தில் ரிலையன்ஸ் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.