Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 3, 2016

மகிழ்ச்சி செய்தி... ஜெ. அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்: மாலினி பார்த்தசாரதி ட்வீட்



சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதாகவும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு என கூறிய மருத்துவமனை நிர்வாகம் பின்னர் நோய்தொற்று இருப்பதாக தெரிவித்தது.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
 
அவரது மேற்பார்வையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
 
அதில், மகிழ்ச்சியான செய்தி... முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தேறிவருகிறார்... அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்வையிட்ட அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.