Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

திருப்பதியில் ஆபத்தான வழிபாட்டை தவிர்க்க வலியுறுத்தல்!



திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் உள்ள பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பூஜை செய்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபத்தான இத்தகைய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் திருமலை பாலாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், திருமலையில் உள்ள நாராயணகிரி மலையில் இயற்கையாக தோன்றிய சுவாமியின் சிலைக்கு பால், மஞ்சள், அபிஷேகம் செய்தனர்.

பின்னர் சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்க முயன்றபோது ஈஸ்வர் என்ற இளைஞர் திடீரென வழுக்கி கீழே விழுந்தார். எனினும், கயிறால் பிணைக்கப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக தொங்கியபடி இருந்தார்.

இதனையடுத்து, அனைவரும் சேர்ந்து அந்த இளைஞரை மேலே இழுத்து வந்தனர். எனினும் இதனைத் பார்த்த பக்தர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆபத்தான பகுதியில் வழிபாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.