October 25, 2016
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு – கோபாலபுரத்தில் பரபரப்பு
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கோபாலபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக முதுகு வலி மற்றும் மூட்டு வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கட்சி நிகழ்ச்சிகளுக்கும், பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, சக்கர நாற்காலி மூலம் அவரை கொண்டு சென்றனர்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். மேலும், கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அலுவல்களை கவனிக்கும் பொறுப்பை திமுக பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழுவதும் கொப்பள்ங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவருக்கு படுக்கவும் முடியாமல் ஆனது. இதையடுத்து அவருக்கு சிகிக்சை அளிக்க டாக்டர்கள், கோபாலபுரம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும், திமுக தொண்டர்கள் ஏராளமானோர், கோபாலபுரம் சென்ற வண்ணம் உள்ளனர்
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு – கோபாலபுரத்தில் பரபரப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.