October 26, 2016
எவருக்கும் வேலை வழங்க வேண்டாம்’ - ஏழைகள்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் மேலும் கூடுதலான மக்களுக்கு வேலை வழங்குவதை நிறுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ‘வாட்ஸ்அப்’ மூலம் உத்தரவிட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசு கிராமப்புற மக்களுக்கு வாழ்க்கை உத்திரவாதம் அளிக்கும் பொருட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் வேலை வழங்கி வந்தது.
ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிதாக எவருக்கும் வேலை வழங்க வேண்டாம் என்று வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது. இத்திட்டத்திற்கு அதிக அளவிற்குநிதி ஒதுக்க முடியாது என்றும், இத்திட்டத்தை ‘புத்திசாலித்தனமாக’ பயன்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க முடியாது என்பதால், மாநிலங்கள் ஏற்கனவே துவங்கியுள்ள திட்டப்பணிகள் குறித்து ஏற்கனவே அனுப்பியுள்ள நிதியை வைத்துக்கொண்டு, ‘சாதுர்யமாகத்’ திட்டமிட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. கிராமப்புற ஏழைமக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் 100 நாட்களுக்கு வேலை வழங்குவது அரசின் கட்டாயமாகும்.
ஆனால் மத்திய அரசு இத்திட் டத்திற்கு இனி நிதி ஒதுக்க இயலாது என்று கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
எவருக்கும் வேலை வழங்க வேண்டாம்’ - ஏழைகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.