October 25, 2016
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசிடமிருந்து அறிவிப்பு வெளிப்படாத நிலையில் இன்று திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்துவது, காவிரி நீரை உரிய முறையில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்காமல் கர்நாடக அரசு காட்டும் பிடிவாதம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், எம்எல்ஏ ராமசாமி, பவன்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் விவசாய சங்க பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் தங்கள் கட்சி கலந்துகொள்ளும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால் மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட பிறக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.